சுவிஸ் மாகாணம் ஒன்றில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார்: பின்னர் தெரியவந்த உண்மை
சுவிஸ் மாகாணம் ஒன்றில், பொலிசார் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
Aargau மாகாணத்தில், சாரதிகள் மது அருந்தியுள்ளார்களா என்று சோதனை செய்தும், வேகமாக செல்பவர்களை மெதுவாக செல்லுமாறு எச்சரிக்கை செய்துகொண்டும் இருந்தார் அவர்.
அவரது மோட்டார் சைக்கிளில் பொலிசார் பயன்படுத்தும் எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.
சாரதிகளின் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமங்களை சோதனை செய்துகொண்டிருந்த அவரை பிற பொலிசார் அணுகியபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது.
அவர் பொலிசாரே அல்ல...
அந்த போலி பொலிசாரை கைது செய்த நிஜ பொலிசார், அவரை விசாரிக்கும்போது, அவர் ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொலிசாரின் கண்காணிப்பில் இருப்பவர் என்பதும் தெரியவந்தது.
அவருக்கு 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.