லண்டன் விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! விமானம் புறப்பட சில நொடிகளுக்கு முன் தடுத்து நிறுத்திய பொலிஸ்
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Heathrow விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான விமானத்தை பொலிசார் தடுத்து நிறுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தாயிடமிருந்து நான்கு வயது பெண் குழந்தையை மர்ம நபர் ஒருவன் காரில் கடத்திச்சென்றதாக வியாழக்கிழமை Nottinghamshire பொலிசாருக்கு புகார் வந்துள்ளது.
நம்பர் பிளேட் கமெரா மூலம் காரை கண்காணித்த பொலிசார், அது லண்டனுக்கு பயணித்ததை கண்டறிந்தனர்.
கடத்தல்காரன் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு Heathrow விமான நிலையத்திலிருந்து ரோமானியா தலைநகர் Bucharest-க்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ள தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விமானநிலையத்திற்கு விரைந்த பொலிசார், விமானம் புறப்படுவதற்கு முன் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, விமானம் முனையத்திற்கு திரும்பியதை அடுத்து கடத்தல்காரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
32 வயதான கடத்தல்காரன் குழந்தைக்கு தெரிந்தவர் என்பதால் சுலபமாக கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், பின்னர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.