சுவிட்சர்லாந்தில் திடீரென பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பொலிசார்
சுவிஸ் நகரமொன்றில் பொலிசார் மேற்கொண்ட ஒரு நடவடிக்கை தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய பொலிசாரின் நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்திலுள்ள Baar என்னுமிடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் மீது திடீரென கயிறுகள் மூலம் இறங்கியுள்ளார்கள் பொலிசார்.
அந்தக் கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த பொலிசார், துப்பாக்கியால் சுடுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
என்னவோ ஏதோவென மக்கள் குழப்பமடைய, பின்னர்தான் தெரியவந்தது, அது பொலிசார் மேற்கொண்ட ஒரு பயிற்சி நடவடிக்கை என்பது.
இப்படிப்பட்ட பயிற்சிகள் நடப்பது சாதாரணமான விடயம்தான் என பொலிசார் கூறினாலும், அந்நகர மக்களோ, அப்பகுதியில் ஒரு குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது என்றும், நகரத்தின் மையப்பகுதியில் இப்படிப்பட்ட பயிற்சி மேற்கொள்வது முறையல்ல என்றும் கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |