கோடிக்கணக்கிலான கறுப்பு பணம் கொள்ளை! சிக்கும் தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர்... பகீர் பின்னணி
3.5 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கொள்ளைஅடிக்கப்பட்ட வழக்கில், நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தேர்தல் செலவுசட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன், இங்குள்ள கொடக்கரா என்ற பகுதியில், ஒரு காரை வழிமறித்து, கொள்ளையர்கள் 25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக புகார் வந்தது.
இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், காரில் இருந்து 3.5 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும் இந்த பணம், தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது.இந்த கொள்ளை சம்பவம் குறித்து, மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தேர்தல் நேரத்தில் பா.ஜ., தலைவர்கள் மேற்கொண்ட ஹெலிகாப்டர் பயணங்களையும், பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணைஇந்நிலையில் இந்த வழக்கில், பிரபல நடிகரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா நியமன எம்.பி.,யுமான சுரேஷ் கோபியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் கற்பூர முல்லை, தீனா, சமஸ்தானம், ஐ போன்ற பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் கோபி மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது