லண்டனில் புகலிடக்கோரிக்கையாளர்களை மீண்டும் படகில் ஏற்ற பொலிசார் முயற்சி: ஆர்ப்பாட்டம், 45 பேர் கைது
லண்டனில், புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்ற மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சமூக ஆர்வலர்கள் ஹொட்டல் ஒன்றின் முன் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹொட்டல் முன் திரண்டுள்ள சமூக ஆர்வலர்கள்
லண்டனிலுள்ள Driscoll House என்னும் ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை 10.00 மணியளவில் சுமார் 5 பொலிஸ் வேன்களில் பொலிசார் அங்கு வந்துள்ளனர்.
? UPDATE:
— Southwark & Lambeth Anti-Raids (@SLAntiRaids) May 10, 2024
? Residents inside Driscoll House Hotel are being told the removal is happening. We’re staying here until we know their removal has been cancelled.
? If you’re not here, please be on standby for when they attempt the removal.
Hands off our neighbours ❤️ https://t.co/7CbgYcsHOi
அவர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களை Bibby Stockholm barge என்னும் மிதவைப்படகில் ஏற்ற வந்துள்ளதால் அவர்களைத் தடுக்கும் நோக்கில், அந்த ஹொட்டலின் முன் சமூக ஆர்வலர்கள் கூடிவருகிறார்கள். இந்த தகவலை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள அவர்கள், பொலிசார் புகலிடக்கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்வதை ரத்து செய்யும்வரை அங்கிருந்து நகரப்போவதில்லை என்று கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், லண்டன் முழுவதும் ஆங்காங்கு இதுபோல சமூக ஆர்வலர்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு இடத்தில் முகமூடி அணிந்த சிலர் பொலிசாரைத் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |