சுவிஸ் மாகாணமொன்றில் மோசடி ஒன்று குறித்து எச்சரிக்கும் பொலிசார்
சுவிட்சர்லாந்தில், அவ்வப்போது மக்களை மோசடியாளர்கள் புதுப்புது யுக்திகள் மூலம் ஏமாற்றி பணம் பறித்துவரும் நிலையில், தற்போது சுவிஸ் மாகாணமொன்றில் வேகமாகப் பரவிவரும் புதியதொரு மோசடி குறித்து பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.
மோசடி ஒன்று குறித்து எச்சரிக்கும் பொலிசார்
சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில், புதியதொரு மோசடி பரவிவருவதாக பொலிசார் மக்களை எச்சரித்துள்ளார்கள்.

அதாவது, மக்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய போலி பார்க்கிங் டிக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன.
இந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தால், அது ஒரு இணையதளத்துக்கு அழைத்துச் செல்கிறது.
அந்த இணையதளம், மக்களுடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்ட் விவரங்களைக் கேட்கிறது.
கூடவே, பணம் கட்டாவிட்டால் கூடுதலாக 80 சுவிஸ் ஃப்ராங்குகள் செலுத்தவேண்டும் என மிரட்டலும் விடுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இணையதளங்கள் இரண்டை பொலிசார் முடக்கிவிட்ட நிலையில், மேலும் புதிதாக அதேபோல் இணையதளங்கள் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே, பார்க்கிங் டிக்கெட் குறித்து யாருக்காவது சந்தேகம் ஏற்படுமானால், பணம் செலுத்தும் முன் உள்ளூர் பொலிசாரை அணுகுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |