மருத்துவமனையில் இருந்து தப்பிய இளைஞர்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த லண்டன் பொலிசார்
லண்டனில் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இளைஞர் ஒருவர், பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தப்பியுள்ள நிலையில், மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசா வன்முறையில் ஈடுபடலாம்
26 வயதான மோசா ஜமால் அபித் என்பவரே பாதுகாப்பு ஊழியர்களை ஏமாற்றி தப்பியவர். ஏப்ரல் 10ம் திகதி மதியத்திற்கு மேல் 3 மணியளவில் மோசா ஜமால் அபித் தப்பியுள்ளார்.
இந்த நிலையில், மாநகர பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசா வன்முறையில் ஈடுபடலாம் எனவும் அவரை அணுக வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
Image: MPS
ஈலிங்க் பகுதியில் உள்ள உக்ஸ்பிரிட்ஜ் சாலையில் கிழக்கு நோக்கி மோசா மாயமாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மோசா தப்பிய பின்னர், அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடப்பட்டது. ஆனால் அவர் தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதனிடையே, கண்காணிப்பி கமெரா பதிவுகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு உடல்நிலை சிக்கல் காரணமாக மருந்து தேவைப்படலாம் எனவும், இதனால் மருத்துவ உதவிக்காக அவர் ஏதேனும் மருத்துவமனையில் செல்லலாம் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்
அத்துடன் இப்தார் காலம் என்பதால் உணவு அல்லது தண்ணீருக்காக அவர் உள்ளூர் மசூதிகளை அணுகலாம் என்றும் பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து, மருத்துவமனைகள் மற்றும் மசூதிகளுக்கு மோசா தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Image: MPS
மோசா தப்பியுள்ள விவகாரம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான் என குறிப்பிட்டுள்ள பொலிசார், தாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும்,
மோசாவைக் கண்டுபிடித்து, அவரை விரைவில் மருத்துவமனைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.