சாரா கொலை வழக்கில் பெரும் திருப்பம்! லண்டன் பொலிஸ் கமிஷனர் ராஜினாமா செய்ய அழுத்தம்..
லண்டனை உலுக்கிய சாரா எவரார்ட் கொலை வழக்கு முடிவுக்கு வந்ததாக எண்ணப்பட்ட நிலையில், தற்போது மிகப்பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு லண்டனில் கடந்த மார்ச் 3-ஆம் திகதி சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண்ணை Wayne Couzens எனும் காவல்துறை அதிகாரி, கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைது செய்து, காரில் Kent-க்கு கடத்தி வந்து துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்து, பின் மீதமிருந்த எச்சங்களை அருகே உள்ள இடத்தில் புதைத்தார்.
இந்த வழக்கில், நேற்று (செப்டம்பர் 30) குற்றவாளி Wayne Couzens-க்கு மீதமுள்ள வாழ்நாள் முழுமையையும் சிறையில் இருக்குமாறு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது என்று கருதப்பட்ட நிலையில், இப்போது இந்த வழக்கில் மிகப்பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விராரணையின்போது, Wayne Couzens சாரா எவர்டைக் கொலை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஒரு ஒரு வாட்ஸ்அப் குழுவில் 3 லண்டன் பெருநகர காவல்துறை அதிகாரிகள் உட்பட பணியில் இருக்கும் 6 பொலிஸ் அதிகாரிகளுக்கும் Wayne Couzens-க்கும் இடையில் சந்தேகத்திற்கிடமான 'மோசமான' செய்திகள் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு முன்னாள் அதிகாரி உட்பட மொத்தம் 16 அதிகாரிகளை காவல் கண்காணிப்பு அமைப்பு விசாரித்து வருகிறது.
Photo CREDIT: SWNS
இதனால், பாலியல் குற்றச்சட்டுகளில் மேலும் பல பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், லண்டன் பெருநகர் காவல்துறை ஆணையரான Dame Cressida Dick பதவிவிலகக் கோரி அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
பிரித்தானிய உள்துறை செயலாளர் பிரிதி பட்டேல், காவல்துறை 'பதிலளிக்க வேண்டிய தீவிரமான கேள்விகள் உள்ளன' என்று கூறியதுடன், மேலும் குழப்பமடைந்த மெட் கமிஷனருக்கு அவரது பொது ஆதரவை கொடுக்க மறுத்துவிட்டார்.
