ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள சம்பவம்
ஜேர்மனியில், வீடொன்றில் துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு செல்ல, அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது.
ஜேர்மனியில் வீடொன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்
ஞாயிற்றுக்கிழமையன்று, தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Albstadt நகரில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் கிடைக்கவே, பொலிசார் அங்கு விரைந்துள்ளார்கள்.
அங்கு சென்று பார்க்கும்போது, அந்த வீட்டில் மூன்று பேர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில், மற்றவர்களை துப்பாக்கியால் சுட்ட நபரும் ஒருவர் என கருதப்படுகிறது.
குடும்பத் தகராறாக துவங்கிய சண்டையில், ஒருவர் மற்றவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்டதில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அதே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
என்ன பிரச்சினை, எதனால் அந்த நபர் தன் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |