பிரித்தானியாவில் இரு பாடசாலை சிறுமிகள் தொடர்பில் கோரிக்கை வைத்த பொலிஸ்
பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இளம் பெண் கொலையில் திகில் அடங்கும் முன்னர் கென்ட் பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் மாயமாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் ஆஷ்போர்ட், கென்ட் பகுதியிலேயே கடைசியாக காணப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மார்ச் 15 முதல் மாயமாகியுள்ள Chloe Sutton(14) மற்றும் Grace Perry(13) ஆகிய இருவர் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் காவல்துறையை நாட வேண்டும் என்ற கோரிக்கையை கென்ட் பொலிசார் முன்வைத்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சாரா எவரார்ட் கொலை சம்பவத்தில் அவரது உடல் ஆஷ்போர்டில் உள்ள வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த இரண்டு சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.
33 வயதான மார்க்கெட்டிங் நிர்வாகி சாரா எவரார்ட் 12 ஆண்டுகளுக்கு முன்பு யார்க்கிலிருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.
மார்ச் 3ம் திகதி மாலை, தெற்கு லண்டனின் கிளாபமில் ஒரு நண்பரின் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சாரா காணாமல் போனார்.
இந்த வழக்கில் 48 வயதான Wayne Couzens என்ற பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் மற்றும் கொலை வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளது.
அவர் மீதான வழக்கு விசாரணை அக்டோபர் 25 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.