வெறும் 200 பவுண்டுகள் தொகையுடன் பிரித்தானியா வந்த இளைஞர்... அவரது நிறுவனத்தின் மதிப்பு தெரியுமா?
போலந்தில் இருந்து வெறும் 200 பவுண்டுகள் பணமும் ஒரு மிதிவண்டியுடன் பிரித்தானியாவுக்கு வந்த அகதி ஒருவர் தற்போது ஆண்டுக்கு 7 மில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம் ஒன்றிற்கு உரிமையாளராக உள்ளார்.
ஒரு மிதிவண்டி மற்றும் 200 பவுண்டுகள்
போலந்தை சேர்ந்த Alex Landowski சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தாவுக்கு பிழைக்க வரும் போது அவரிடம் ஒரு மிதிவண்டி மற்றும் 200 பவுண்டுகள் தொகை மட்டுமே இருந்துள்ளது.
Image: Rowan Griffiths
24 வயதில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பான எந்த திட்டமும் இன்றி, நண்பர் ஒருவரின் படுக்கையறையில் இன்னொரு 10 அகதிகளுடன் தரையில் படுத்துறங்கி வாய்ப்புகளை தேடிச் சென்றுள்ளார்.
தற்போது அவர் மருந்து டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 25 ஊழியர்களும் 50க்கும் அதிகமான ஒப்பந்ததாரர்களும் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது 37 வயதாகும் அலெக்ஸ், போலந்தில் தோல்வியுற்ற தமது தொழில் முயற்சியால் ஏற்பட்ட கடனை திருப்பி செலுத்தும் நம்பிக்கையில் பிரித்தானியாவுக்கு பயணமானார். அரசாங்கத்திடம் இருந்து கடனைப் பெற்று தொழில் தொடங்கிய அலெக்ஸ், அதில் தோல்வியை தழுவியுள்ளார்.
Image: Rowan Griffiths
சுமார் 20,000 பவுண்டுகள் போலந்து அரசாங்கத்திற்கு திருப்பி செலுத்தும் இக்கட்டான நிலை 24ம் வயதில் ஏற்பட்டது என்கிறார் அலெக்ஸ். அந்த தொகையை குடும்பத்தினர் திருப்பி செலுத்துவார்கள், ஆனால் அலெக்ஸ் குடும்பத்தினருக்கு அந்த தொகையை அளிக்க வேண்டும்.
மிதிவண்டியில் கூரியர் சேவை வேலை
இந்த நிலையில், வெறும் 200 பவுண்டுகள் தொகையும் அரைகுறை ஆங்கிலமும் ஒரு மிதிவண்டியுடனும் லண்டனுக்கு புறப்பட்டார் அலெக்ஸ். சில வாரம் வேலை தேடி அலைந்ததில், இறுதியாக மிதிவண்டியில் கூரியர் சேவை வேலை ஒன்றை கண்டுபிடித்தார், ஆனால் ஊதியமின்றி வேலை செய்ய வேண்டும்.
கையில் இருக்கும் காசும் காலியாகி வர, லண்டன் மொத்தம் சுற்றிய அனுபவம் மட்டுமே அவருக்கு மிஞ்சியுள்ளது. தற்போது கையில் பணமில்லை, ஆனால் லண்டனில் ஒவ்வொரு தெருவாக சுற்றிய அனுபவம் இருந்தது.
இந்த நிலையில், அதே கூரியர் வேலை, ஆனால் சம்பளத்துடன் புதிய நிறுவனம் ஒன்றில் கிடைத்துள்ளது. ஊதியம் குறைவு என்பதால் அதற்கேற்ற ரகசிய வாழ்க்கை வாழ வேண்டிய நெருக்கடி.
Image: Rowan Griffiths
இதனிடையே, கடின உழைப்புக்கு பலனாக நாள் ஒன்றுக்கு 60 பவுண்டுகள் ஊதியமாக பெற்றார். சில ஆண்டுகளுக்கு பின்னர், லண்டனில் மருந்துகளை உரிய நேரத்தில் கூரியர் செய்யும் பொருத்தமான ஆட்கள் இல்லை என்பதை உணர்ந்த அலெக்ஸ்,
நண்பர் ஒருவரிடம் இருந்து 50,000 பவுண்டுகள் கடனாக பெற்று பொது மருத்துவர்கள் மற்றும் சுகாதார மையங்கலுக்கு மருந்துகளை தாமே கொண்டு சேர்க்கும் பணியை துவங்கினார்.
அந்த பணியை தற்போது சில நிறுவனங்களில் இருந்து முதலீடு பெற்று முன்னெடுத்து வருகிறார்.
Cotswolds பகுதியில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வரும் அலெக்ஸ், பிரித்தானிய குடியுரிமை பெறும் முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.