ஜேர்மனியிலிருந்து வெளியேறும் ஒரு நாட்டு மக்கள்: பின்னணி
The Polish workers heading home leaving Germany: போலந்து நாட்டு மக்கள் பலர் ஜேர்மனியை விட்டு தொடர்ந்து வெளியேறிவருகிறார்கள்.
கல்வி கற்றுவிட்டு ஜேர்மனியில் வேலை செய்யும் நோக்கத்துடன் வந்தவர்கள், பல ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்துவந்தவர்கள் என, போலந்து நாட்டவர்களில் பலர் தொடர்ந்து ஜேர்மனியை விட்டு வெளியேறிவருகிறார்கள்.
காரணம் என்ன?
பிலிப் (Philip Panek), ஜேர்மனியில் கல்வி கற்றுவிட்டு, அங்கேயே ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளலாம் என்னும் எண்ணத்துடன் போலந்து நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு வந்தவர்.

ஆனால், இப்போது கல்வி முடிந்ததும், தொழில் தொடர்பிலான பயிற்சியைக் கூட அவர் போலந்து நாட்டில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
மைக்கேல் (Michael Sünkler), ஜேர்மனியிலுள்ள போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர்.
போலந்து நாட்டவர்களை ஈர்த்துவந்த ஜேர்மனி, இப்போது அந்த நிலையை இழந்துவிட்டதைக் காண்பதாக தெரிவிக்கிறார் மைக்கேல்.
சமீபத்திய ஆண்டுகளில், போலந்து நாட்டவர்கள் பலர் ஜேர்மனியை விட்டு வெளியேறி தங்கள் நாட்டுக்கே சென்றுவிட்டதாக தெரிவிக்கிறார் அவர்.
அதற்கு முக்கிய காரணம், பொருளாதார சூழல் என்று கூறும் மைக்கேல், தனது பணியாளர்களில் ஒருவரான தோமஸ் (Tomasz), தனது நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக வேலை செய்துவந்த நிலையில், இப்போது விலைவாசி உயர்வு மற்றும் வாடகையை சமாளிக்கத் திணறுவதாக தெரிவிக்கிறார்.

ஆகவே, தனது மகளுடைய படிப்பு முடிந்ததும், குடும்பத்துடன் மீண்டும் போலந்துக்கே திரும்பிவிட தோமஸ் முடிவு செய்துள்ளதாக மைக்கேல் தெரிவிக்கிறார்.
கமிலா குடும்பத்தைப் பொருத்தவரை பல ஆண்டுகளாக அவருடைய குடும்பம் ஜேர்மனியில் வாழ்ந்து வந்த நிலையில், டிஜிட்டல் சேவைகள் குறைபாடு மற்றும் வரிச்சுமை காரணமாக ஆறு மாதங்களுக்கு முன்பே போலந்துக்குத் திரும்பிவிட்டது அவரது குடும்பம்.
ஆக, ஒரு காலத்தில் ஜேர்மனி போலந்து மக்களைக் கவர்ந்துவந்த நிலையில், விலைவாசி, வரிகள், வாடகை என பல காரணங்களால் இப்போது போலந்து மக்கள் தங்கள் நாட்டுக்கே திரும்பிவருவதாக சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.