நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல்; அமைச்சர்களுக்கு தொடர்பா? - சிக்கியது எப்படி?
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
ரன்யாராவ் தங்க கடத்தல்
கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ்(31), கடந்த மார்ச் 3ஆம் திகதி, தங்கம் கடத்தியதாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.67 கோடி பணமும், ரகசிய லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளைளும் கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, மார்ச் 18 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
துபாய் பயணம்
வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தற்போது சிபிஐ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. ரன்யா ராவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ரன்யா ராவ் கடந்த ஒரு ஆண்டில் 45 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் துபாய்க்கு மட்டும் 25 முறைக்கு மேல் பயணம் செய்துள்ளார். கைதுக்கு முந்தைய 15 நாட்களில் மட்டும், 4 முறை துபாய் சென்று வந்துள்ளார்.
இவர் டிஜிபி ராமசந்திர ராவ்வின் மகள் என்பதால் ஒவ்வொரு முறையும் விஐபி வழித்தடம் வழியாக சென்று சோதனை இல்லாமல் தப்பியுள்ளார்.
நில ஒதுக்கீடு
இந்த கடத்தலில் அதிகாரிகளுக்கு தொடர்புண்டா? சர்வேதச கடத்தல் கும்பலுக்கு பங்கு உண்டா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், பெங்களூருவில் உள்ள சில நகை கடைகள், இவருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனம் உள்ளிட்டவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான க்சிரோடா இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் இரும்பு நிறுவனத்துக்கு தும்குரு மாவட்டத்தில் உள்ள சிரா தொழில்துறை பகுதியில், 12 ஏக்கர் அரசு நிலத்தை கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் ஒதுக்கீடு செய்த விவகாரம் வெளிவந்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளியிட்ட அறிக்கையில், "ரன்யா ராவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் முந்தைய பாஜக ஆட்சியில்தான் ஒதுக்கப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு தொடர்பு
இந்நிலையில், "இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தனது செல்வாக்கை பயன்படுத்தி, பல்வேறு அமைச்சர்களின் உதவியை ரன்யா ராவ் நாடியுள்ளார்.
இரு அமைச்சர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளது பொதுவெளிக்கு வந்துள்ளது. சிபிஐ விசாரணையில் உண்மை தெரிய வரும்" என பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திராவும், அமைச்சர்களுக்கு இந்த வழக்கில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Media reports about the involvement of a prominent minister in @siddaramaiah's government in one of the biggest gold heists in recent times come as no surprise—especially given this government's track record of churning out scandals in increasingly "innovative" ways!
— Vijayendra Yediyurappa (@BYVijayendra) March 10, 2025
The blatant…
அமைச்சர்களை தொடர்பு படுத்தி வந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "இப்போது வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடட்டும். அதுவரை, இது ஊகம்தான்" என தெரிவித்துள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
.