கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால்... முக்கிய பதவிக்கு குறிவைக்கும் ஒரு அரசியல் வாரிசு
அமெரிக்க ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் வெல்வார் என்றார் மிகவும் மதிக்கப்படும் தூதரக அதிகாரி பொறுப்புக்கு செல்சி கிளிண்டன் குறிவைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ட்ரம்புக்கு கடும் சவால்
தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்ததும், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தம்பதி.
மட்டுமின்றி, அதுவரை டொனால்டு ட்ரம்பின் வெற்றி உறுதி என கூறப்பட்டு வந்த நிலையில், கமலா ஹாரிஸ் மொத்த கருத்துக்கணிப்புகளையும் தலைகீழாக மாற்றியுள்ளார்.
தேர்தல் களத்தை அவர் தமக்கு சாதகமாகவும் மாற்றியதுடன், எவரும் எதிர்பாராமல் டொனால்டு ட்ரம்புக்கு கடும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளார். இதுவரை நாட்டின் அடுத்த ஜனாதிபதி தாம் என நம்பிக்கையுடன் இருந்த டொனால்டு ட்ரம்ப் தற்போது விரக்தியடைந்த நிலையில் காணப்படுகிறார்.
அதேவேளை கமலா ஹாரிஸுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இந்த நிலையிலேயே பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் மகள் 44 வயதான செல்சி பிரித்தானியாவுக்கான அமெரிக்க தூதர் பொறுப்புக்கு குறிவைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
செல்சியின் நீண்ட நாள் கனவு
கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக தெரிவானால், தமது பெற்றோர் உதவியுடன் தாம் தூதுவர் பொறுப்புக்கு வர முடியும் என்றே செல்சி நம்புகிறார். ஜோ பைடனிடம் இருந்து அறிக்கை வெளியான முதல் 5 நிமிடங்களிலேயே பில் மற்றும் ஹிலாரி தம்பதி கமலா ஹாரிஸுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளதன் பின்னணி இதுவாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
செல்சியின் நீண்ட நாள் கனவு இதுவென்றும், கிளிண்டன் தம்பதி இந்த திட்டத்தை நீண்ட காலமாக விவாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிரித்தானியா அல்லது பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவராக மகளுக்கு பதவி வாங்கித் தர கிளிண்டன் தம்பதி முடிவு செய்துள்ளனர்.
ஆனால் கமலா ஹாரிஸை தாங்கள் ஆதரிப்பதன் பின்னனியில் இப்படியான திட்டமிருப்பதாக வெளியான தகவலை கிளிண்டன் தம்பதி மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |