அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை தமிழகத்தில் மாற்றப்படுவார்: எஸ்.வி.சேகர்
அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
மோடி பிரதமாராவது உறுதி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், "அதிமுக மற்றும் பாஜக கூட்டணியால் மத்தியில் உள்ள பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.
தமிழ்நாட்டில், அதிமுக கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. தமிழ்நாடு பெரிய அளவில் பாஜகவுக்கு உதவி செய்ய போவதில்லை" என்றார்.
அண்ணாமலை மாற்றப்படுவார்
மேலும் பேசிய அவர், "இந்த கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என பாஜக தலைமைக்கு சொல்லியிருக்கிறார்கள். அதாவது, கூட்டணி தலைவர்களை தவறாக விமர்சிப்பதால் தான் கூட்டணி பிரிந்தது என்று கூறியுள்ளனர்.
அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாத அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக அமர்த்தியது தவறு தான். அதை பாஜக மேலிடம் விரைவில் உணரும். மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் போது, அம்மாநில பார்வையாளராக அண்ணாமலையை மாற்றிவிடுவார்கள்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார். அவர் இருக்கும் வரை தமிழக பாஜக பூஜ்ஜியமாக தான் இருக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |