பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும்: நான்கு பெரிய நாடுகள் விருப்பம்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என, நான்கு பெரிய நாடுகளிலுள்ள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும்
ஆய்வமைப்பான YouGov மேற்கொண்ட ஆய்வொன்றில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், பிரித்தானியா உட்பட ஆறு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் YouGov அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிடத்தக்க அளவிலான பிரித்தானியர்களும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
அதேநேரத்தில், முன் போல் இல்லாமல், பிரித்தானியாவும் யூரோ கரன்சியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுபோன்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டே பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய அனுமதிக்கவேண்டும் என்ற ஒரு கருத்து மேலோங்கி உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |