பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடந்தால் இந்தக் கட்சிக்குதான் பெரும்பான்மை... ஆய்வு முடிவுகள்
பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடைபெறுமானால், Reform UK கட்சிக்குதான் அதிக இருக்கைகள் கிடைக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வொன்று.
இவர்தான் பிரித்தானியாவின் பிரதமர்
Electoral Calculus என்னும் ஆய்வமைப்பு நடத்திய ஆய்வில், பிரித்தானியாவில் நாளை தேர்தல் நடைபெறுமானால், Reform UK கட்சிக்கு 445 இருக்கைகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
Reform UK கட்சியைத்தொடர்ந்து, தற்போது ஆளும் லேபர் கட்சிக்கு 73 இருக்கைகளும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 42 இருக்கைகளும் கிடைக்கலாம்.
விடயம் என்னெவென்றால், முன்னர் ஆண்ட போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வெறும் 7 இருக்கைகள்தான் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.
பிரித்தானியாவில் ஒரு கட்சி தனிப்பெறும்பான்மை பெற 326 இருக்கைகள் போதும் என்னும் நிலையில், கருத்துக்கணிப்புகளில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்துவரும் Reform UK கட்சியின் தலைவரான Nigel Farage, அடுத்து பிரித்தானியாவின் பிரதமராகவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |