ஆன்டி பர்னாம் பிரதமரானதும் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம்
பிரித்தானிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்ற நேரம், லேபர் கட்சிக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது.

ஆன்டி பர்னாம் பிரதமரானதும்...
ஆம், ஆன்டி பர்னாம் பிரதமரானதும் லேபர் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இறுதியில் நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி, மற்ற அனைத்துக் கட்சிகளையும் விட 10 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.

ஆனால், ஆன்டி பர்னாம் பிரதமரானதற்குப் பின், முதன்முறையாக தற்போது லேபர் கட்சி ரீஃபார்ம் கட்சியைத் தாண்டி 4 புள்ளிகள் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆன்டி பர்னாமிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, தான் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் அளவுக்கு மீறி உற்சாகமடையவில்லை என்றும், அதே நேரத்தில், மக்கள் நேர்மறையாக (positive) பதிலளித்துள்ளது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |