மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் பிரித்தானியர்கள்: ஆய்வு முடிவுகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிப்பதா, அல்லது வெளியேறுவதாக என இன்றைக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தினால், ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிப்பது என்றுதான் முடிவெடுப்போம் என பிரித்தானியர்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில்...
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிப்பதா, அல்லது வெளியேறுவதாக என இன்றைக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தினால், பிரித்தானியர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை அறிவதற்காக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற 2,000 பிரித்தானியர்களில் 52 சதவிகிதம் பேர், தாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்போம் என்றுதான் வாக்களிப்போம் என்று கூறியுள்ளார்கள்.
29 சதவிகிதம் பேர் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கூறியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், 2016ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் நடத்திய வாக்களிப்பில், வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தார்கள்.
ஆக, மக்கள் மன நிலைமை மாறியுள்ளது இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், லேபர் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருகிறது. ஆக, மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை ஸ்டார்மர் நிராகரித்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக வர்த்தக உறவு கொள்வதற்கு ஆதரவாக அவர் செயல்பட்டுவருவதுடன், ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |