ராஜகுடும்பத்திலேயே பிரபலமான நபர் யார்? முதலிடத்தை இழந்தார் கேட்
ராஜகுடும்பத்திலேயே மக்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்பதை அறிய அவ்வப்போது பிரித்தானியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
அவ்வகையில், நீண்ட நாட்களாக மக்கள் ஆதரவில் முதலிடம் பிடித்துவந்த இளவரசி கேட், முதலிடத்தை இழந்துள்ளார்.
ராஜகுடும்பத்திலேயே பிரபலமான நபர் யார்?
Ipsos என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இளவரசி கேட்டை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த நபர் வேறு யாருமில்லை, அவரது கணவரான இளவரசர் வில்லியம்தான்!

ஆம், 69 சதவிகித மக்கள் இளவரசர் வில்லியம்தான் தங்களுக்கு மிகவும் பிடித்த ராஜகுடும்ப உறுப்பினர் என்று கூறியுள்ளார்கள். இளவரசி கேட்டுக்கு 66 சதவிகித ஆதரவு கிடைத்துள்ளது.

ராஜகுடும்பத்தில் மக்கள் ஆதரவை பெருமளவில் இழந்துள்ள நபர் இளவரசர் ஆண்ட்ரூ.

மோசமான நபருடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த ஆண்ட்ரூ தங்களுக்குப் பிடித்தவர் அல்ல என 82 சதவிகித பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |