பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ஆய்வு முடிவுகள்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது, லேபர் கட்சியினர் ஆதரவு யாருக்கு அதிகம் என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
லேபர் கட்சியினர் ஆதரவு யாருக்கு?
ஆய்வமைப்பான YouGov அமைப்பு, லேபர் கட்சி உறுப்பினர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்றில், ஆன்டி பர்னாமுக்கே அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.

லேபர் கட்சியின் தலைமையைக் கைப்பற்ற திட்டமிட்டுவரும் ஆன்டி பர்னாம், கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார்.
ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆகவே, அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடமுடியும்.
ஆன்டிக்கு, லேபர் கட்சி உறுப்பினர்களிடையே 47 சதவிகித ஆதரவு உள்ளது.
பிரித்தானிய பிரதமரும், லேபர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர் உட்பட வேறு யாருக்கும் இந்த அளவுக்கு ஆதரவில்லை.

ஆன்டிக்கு அடுத்தபடியாக லேபர் கட்சியினரின் ஆதரவு அதிகம் உள்ளது பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்குத்தான். அவருக்கு 31 சதவிகித ஆதரவு உள்ளது.
ஸ்டார்மருக்கு எதிராக பிரதமர் போட்டியில் களமிறங்குவதற்காக தன் சுகாதாரச் செயலர் பதவியையே ராஜினாமா செய்த வெஸ் ஸ்ட்ரீட்டிங்குக்கு வெறும் 4 சதவிகித ஆதரவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |