டி20 உலகக்கோப்பைக்கு குறி வைத்த இங்கிலாந்து..அதிரடி மன்னன் பொல்லார்ட் நியமனம்
மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் கீரன் பொல்லார்ட் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
படுமோசமான செயல்பாடு
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் படுமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று வெளியேறியது.
நடப்பு சாம்பியனான இருந்த இங்கிலாந்து அணியின் ஆட்டம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.
Reuters
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இதற்காக ஒவ்வொரு அணியும் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை 2-3 என இழந்தது.
AFP
கீரன் பொல்லார்ட்
இதனால், மேற்கிந்திய தீவுகளின் மைதானங்களின் சூழல், Pitch-யின் செயல்பாடுகள் குறித்து கவனம் கொண்டுள்ள இங்கிலாந்து அணி நிர்வாகம் கீரன் பொல்லார்ட்டை துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
Gareth Copley/Getty Images
இது கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்தின் புத்திசாலித்தனமான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், 2012ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர் பொல்லார்ட். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கு இக்கட்டான சூழலில் முக்கிய பங்கும் வகித்துள்ளார்.
இதன்மூலம் அவர் 600க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவத்தையும் பொல்லார்ட் கொண்டுள்ளார். மேலும், மேற்கிந்திய தீவுகள் குறித்து நுணுக்கமான அறிவை பெற்றுள்ள பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் உள்ளார்.
எனவே இங்கிலாந்து அணியை அவர் சிறப்பான முறையில் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |