ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! ருத்ர தாண்டவமாடிய பொல்லார்டு..மிரண்டுபோன ரஷீத் கான்(வீடியோ)
The Hundred போட்டியில் சௌதர்ன் பிரேவ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட போட்டி தொடரான The Hundred Mens Competition நடந்து வருகிறது.
சௌதம்டானில் நேற்று நடந்த போட்டியில் Trent Rockets மற்றும் Southern Brave அணிகள் மோதின.
முதலில் ஆடிய Trent Rockets 8 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாம் பான்டன் 17 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் குவித்தார். கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் மற்றும் பிரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Kieron Pollard hitting FIVE SIXES IN A ROW! ?#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/WGIgPFRJAP
— The Hundred (@thehundred) August 10, 2024
பின்னர் களமிறங்கிய Southern Brave அணியில், தொடக்க வீரர்கள் அலெக்ஸ் டேவிஸ் 28 (19) ஓட்டங்களும், ஜேம்ஸ் வின்ஸ் 28 (26) ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்து வந்த வீரர்கள் ரஷீத், டர்னர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால் கிரேன் பொல்லார்டு (Kieron Pollard) ருத்ரதாண்டவம் ஆடினார்.
குறிப்பாக ரஷீத் கான் (Rashid Khan) வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர, Southern Brave 8 விக்கெட் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பொல்லார்டு 23 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் குவித்தார். டர்னர் 3 விக்கெட்டுகளும், சாம் குக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
For *that* batting performance, your Meerkat Match Hero is Kieron Pollard ?#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/PnNfitKEtP
— The Hundred (@thehundred) August 10, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |