18 பந்தில் 54 ஓட்டங்கள் விளாசிய பொல்லார்ட்! ருத்ர தாண்டவமாடி வெற்றியை பறித்த இருவர்
கரீபியன் பிரீமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
பொல்லார்ட் ருத்ர தாண்டவம்
ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் கயானா அமேசான் வாரியர், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 5 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் குவித்தது. கேசி கார்டி 29 ஓட்டங்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard) 18 பந்துகளில் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய கயானா அணி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹெட்மையர் கூட்டணி மிரட்டியது.
ஹெட்மையர், ஹோப்
ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) 30 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் அடித்த ஷாய் ஹோப் (Shai Hope) 46 பந்துகளில் 53 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
டிவைன் பிரிட்டோரியஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 26 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள்) எடுக்க, கயானா அணி 19.5 ஓவரில் 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |