வாணவேடிக்கை காட்டிய பொல்லார்டு! ஆர்ப்பரித்த ரசிகர்கள்
PSL தொடரின் நேற்றையப் போட்டியில் சிக்ஸர்களை விளாசிய கிரேன் பொல்லார்டு அரைசதம் அடித்தார்.
பொல்லார்டு மிரட்டல்
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் நேற்றையப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் கிளண்டர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முல்தான் அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்களான ரிஸ்வான் 33 ஓட்டங்களும், உஸ்மான் கான் 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரோஸோவ் 13 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய பொல்லார்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவரது அதிரடியால் முல்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மொத்தம் 6 சிக்ஸர்கள் விளாசிய பொல்லார்டு, 34 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
𝐏𝐎𝐋𝐋𝐀𝐑𝐃 𝐓𝐇𝐄 𝐁𝐈𝐆-𝐇𝐈𝐓𝐓𝐈𝐍𝐆 𝐌𝐀𝐂𝐇𝐈𝐍𝐄 💥
— PakistanSuperLeague (@thePSLt20) March 15, 2023
Giving the treatment to the Qalandars 💪#HBLPSL8 | #SabSitarayHumaray | #LQvMS pic.twitter.com/k2CfWGN3xq
மறுமுனையில் டிம் டேவிட் 15 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் முல்தான் அணி 160 ஓட்டங்கள் எடுத்தது.
He is incharge 🫡#HBLPSL8 | #SabSitarayHumaray | #LQvMS pic.twitter.com/fT5a5pADF5
— PakistanSuperLeague (@thePSLt20) March 15, 2023
சுருண்ட லாகூர்
அதன் பின்னர் களமிறங்கிய லாகூர் அணி 14.3 ஓவரில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 19 ஓட்டங்கள் எடுத்தார்.
முல்தான் அணியின் தரப்பில் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டுகளும், உஸமா மிர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் முல்தான் சுல்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பொல்லார்டு ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Owned it tonight, @KieronPollard55 👏🏻#HBLPSL8 | #SabSitarayHumaray | #LQvMS pic.twitter.com/5I8t86VXyP
— PakistanSuperLeague (@thePSLt20) March 15, 2023