ரூ.87 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பொல்லார்ட் சூப்பர் கிங்சிலிருந்து விலகல்
pollard pull out joburg super kings deal for 2027: 2027 SA20 தொடருக்காக JSK அணி பொல்லார்ட்டை ரூ.87 லட்சத்திற்கு வாங்கிய நிலையில், 2027 SA20 தொடரில் பொல்லார்ட் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JSKவிலிருந்து பொல்லார்ட் விலகல்
2027 SA20 தொடருக்கான ஏலம் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி நடைபெற்றது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்(JSK), மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட்டை, 1,500,000 தென்னாப்பிரிக்க ராண்ட்ற்கு(இந்திய மதிப்பில் ரூ.87 லட்சம்) வாங்கியுள்ளது.

இந்நிலையில், 2027 SA20 தொடரில் பொல்லார்ட் விளையாட மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக ஏலப் பட்டியலுக்கு வெளியே இருந்து ஒருவரை, இப்போது தங்கள் அணியில் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் JSK தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஐபிஎல் 2027 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பொல்லார்ட் நியமிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

MI அணிகளுடன் நெருங்கிய அனுபவம் கொண்ட பொல்லார்ட், 2010 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார். அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
மேலும், 2024 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற SA20 தொடரில் MI CT அணிக்காக விளையாடியுள்ளார்.
The hundred தொடரில் எம்ஐ லண்டன் அணிக்கு பயிற்சியளராக உள்ள அவர், MLC தொடரில் 2023-26 எம்ஐ நியூயார்க் அணிக்காகவும், ILT20 தொடரில் (2023 - 26) எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.