பிக்பாஸ் செட்டை மூட உத்தரவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்
கன்னட பிக்பாஸ் சூட்டிங் செட்டை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ்
தமிழ், ஹிந்தி, கன்னடம் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தொடர் நடைபெறுகிறது.
கன்னட பிக்பாஸ் 12வது தொடர் கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் இதனை தொகுத்து வழங்கி வருகிறார்.
பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள பிடடியில் ஜாலி வுட் ஸ்டூடியோஸில், இதற்காக செட் அமைக்கப்பட்டு அங்கு போட்டியாளர்கள் தங்கியுள்ளனர். அங்கு ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தி செட்டை மூடுமாறு கர்நாடகா அரசு மாசு கட்டுப்பாடு வாரியம்(KSPCB) உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம்?
பிக்பாஸ் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டதன் காரணமாக சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் கப், காகிதத் தகடுகள் மற்றும் பிற பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்கள் போன்ற திடக்கழிவுகள் முறையாகப் பிரிக்கப்படவில்லை.
இவ்வாறு கழிவுநீர் அகற்றுதல் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விதிகள் மீறப்பட்டுள்ளது.மேலும், நீர் சட்டம் மற்றும் காற்றுச் சட்டத்தின் கீழ் தேவையான உரிமங்களை பெறவில்லை.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் முறையான அனுமதி கோரி விண்ணப்பிக்காத நிலையில், தற்போது ஸ்டூடியோ வளாகத்தை மூட சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பிக்பாஸ் தொடர் இடைநிறுத்தப்படுமா என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |