பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம்! அறிகுறிகள் இதுதான் உஷார்
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்களை பாதிக்கும் ஒரு பிரச்சினையாக “பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம்” இருந்து வருகிறது. இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண் ஹார்மோன் ஆன ஆன்ட்ரோஜன் செயல்பாடு அதிகமாக இருக்கும்.
இது கருப்பை ஹார்மோன் உற்பத்தி செய்வதையையும் கருமுட்டை உருவாக்கத்தையும் தடுக்கிறது.
இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோமால் பெண் ஹார்மோன் சமச்சீரற்ற நிலையை அடைகிறது. இதுவே பெண்களின் மலட்டுத்தன்மைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இதனால் உடல் பருமன், ஹார்மோன் பிரச்சினைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், குழந்தையின்மை, தேவையில்லாத இடங்களில் முடி வளர்ச்சி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது இதன் அறிகுறிகள் என்ன? இதற்கு தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.
அறிகுறிகள்
- 28 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் வர வேண்டிய முறையான மாதவிடாய் சுழற்சி இவர்களுக்கு ஏற்பவதில்லை என்பதால், மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவதால் அதிக ரத்தப் போக்கும், அதனால் அதிகப்படியான வயிற்று வலியும் உண்டாகிறது.
- பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட 70% பெண்களுக்கு முதுகு, தொப்பை, மார்பு உட்பட முகம் மற்றும் உடலில் முடி வளர்ச்சி காணப்படும். உச்சந்தலையில் முடி மெலிந்து போய் வழுக்கை உருவாகும்.
- கழுத்து, இடுப்பு மற்றும் மார்பகங்களுக்கு அடியில் சருமத்தில் கருமையான திட்டுக்கள் தோன்றும்.
ஹார்மோன் மாற்றங்களால் சில பெண்களுக்கு தலைவலி உண்டாக வாய்ப்புள்ளது.
- ஆண் ஹார்மோன் சுரப்பு இருப்பதால் எண்ணெய் பசை அதிகரித்து முகம், மார்பு மற்றும் மேல் முதுகு பகுதியில் முகப்பருக்கள் தோன்றும்.
தீர்வு
- 100 கிராம் கொத்தமல்லி (தனியா) விதையைப் பொடி செய்து, பொடியையும் மற்றும் 100 கிராம் நெல்லிக்காய் பொடியையும் எடுத்து, அவற்றை ஒன்றாக நன்கு கிளறவும். அதை சிறிய டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து 1 1/2 கிளாஸ் டம்ளரில் கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி குடியுங்கள். இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றிலும், மாலை 1 மணி நேரம் உணவுக்கு முன்பும் குடியுங்கள்.
- 100 கிராம் ஓமம் மற்றும் 100 கிராம் கேரட் விதைகளை ஒன்றாக அரைத்து ஒரு கலவையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் இந்த விதைகளை எடுத்து 1 1/2 கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். நன்றாக தண்ணீரைக் கொதிக்கவிட்டு பாதியாக வற்றிய பிறகு காலையில் வெறும் வயிற்றிலும், மாலையில் இரவு உணவுக்கு முன்பு ஒரு மணி நேரத்துக்கு முன்பும் என குடித்து வாருங்கள்.
- பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோமை தடுக்க வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடியுங்கள். வெள்ளி நகைகளை அணியுங்கள். வெள்ளி உங்க உடலுக்கு குளிர்ச்சி தந்து பெண்களின் மனநிலையை அமைதியாகவும், மனநிலை மாற்றங்களில் இருந்து விலக்கி வைக்கவும் உதவுகிறது