தொடரும் ராகிங் கொடுமைகள்: இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவர்
ராகிங் கொடுமைகளைத் தடுக்க அரசு சட்டமே கொண்டுவந்தாலும், சில இடங்களில் ராகிங் கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன.
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட மாணவர்
பீஹார் மாநிலத்திலுள்ள அராரியா என்னுமிடத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், அதே பாலிடெக்னிக்கில் பயிலும் சீனியர் மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
முதலாமாண்டு பயிலும் ரௌஷன் சிங் என்னும் அந்த மாணவரை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கட்டைகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கத்திகளால் தாக்கியுள்ளார்கள்.

அவர் சுயநினைவிழந்து விழுந்ததும், அவரை அப்படியே விட்டு விட்டு ஓடியுள்ளார்கள் அவர்கள்.
ரௌஷன் சிங்கைத் தாக்கிய 12 முதல் 13 மாணவர்களை பொலிசார் அடையாளம் கண்டுள்ளார்கள். என்றாலும், சம்பவத்தைக் கண்ணால் கண்டவர்கள் சுமார் 30 மாணவர்கள் வரை தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
ரௌஷன் சிங்கின் தந்தையான ரவீந்தர் சிங் கொடுத்த புகாரைத் தொடர்ந்து அந்த கொடூர தாக்குதல் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள் பொலிசார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |