Face pack: இளமையை தக்க வைத்துக்கொள்ள இத மட்டும் செய்து பாருங்க
Pomegranate
Skin Care
Water
By Kirthiga
மாதுளைப்பழம் கடந்த சில வருடங்களாக கொரியப் பெண்களிடையே மிகவும் பிரபலமான பழமாக மாறியுள்ளது.
அதன் புளிப்பான சுவை மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது.
பெண்களின் ஆரோக்கியம், தோல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது எனலாம்.
ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகின்றது?
-
மாதுளையை தொடர்ந்து உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
-
இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- கொழுப்பைக் குறைக்கிறது.
-
செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- கருவுறுதலை அதிகரிக்கிறது.
- முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
- சருமத்தை ஈரப்பதத்துடன் பாதுகாக்கிறது.
-
முகப்பருவை குறைக்கிறது.
- ஆரோக்கியமான தோல்.
- மாதுளையில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்பு இழப்பைத் தடுக்கவும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கவும் உதவுகின்றது.
இதில் இடம்பெற்றுள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்வரஸ், வைட்டமின் சி, கே, பொட்டாசியம், சோடியம் ஆகியவை, அழகு பராமரிப்பிலும் அளப்பரிய நன்மைகளை வழங்குகிறது.
மாதுளையை எப்படி பயன்படுத்துவது?
-
ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
- மாதுளை விதைகளை சர்க்கரையுடன் கலந்து அரைத்து, முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி விடும்.
- மாதுளை சாற்றுடன் முல்தானி மட்டியும் கலந்து பேஸ் பெக் போட்டால், சருமத்தில் உள்ள ஈரப்பதம் வெளியேறாமல் இருக்கும்.
மாதுளை தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இதன்மூலம் வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை எதிர்த்து இளமையைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US