நடிகர் போண்டா மணி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய கேப்டன் விஜயகாந்த் - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது குடும்பத்திற்கு நடிகர் விஜயகாந்த் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த போண்டா மணி
1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்பட பல நடிகர்களுடன் சேர்ந்து சுமார் 270 திரைப்படங்களை நடித்துள்ளார்.
இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் 2 சிறுநீரகமும் செயலிழந்து, மாற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டிருந்தார்.
இவர் வறுமையில் வாடியுள்ளதால் பல பிரபலங்களுக்கு உதவி அளித்து வந்துள்ளனர்.
தனது வாடகை வீட்டில் இருந்த இவர், நேற்று 11 மணியளவில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, இவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவரது மறைவிற்கு அனைத்து திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது இரங்கலை தெரிவித்ததோடு போண்டா மணியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.
நிதியுதவி வழங்கிய கேப்டன் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் போண்டா மணி குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மேலும் இவர் தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.
— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் (1-2) #போண்டாமணி pic.twitter.com/6v2CgrYd3a
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |