பொங்கலில் இனிப்பு அதிகம் சாப்பிட்டு விட்டீர்களா! கவலை படாமல் இதை செய்யுங்க போதும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகமான இனிப்பை சாப்பிட்டு விட்டீர்களா, கவலையே வேண்டாம் அவற்றை சரி செய்து மன எழுச்சி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்தாலே போதும்.
பொங்கல் இனிப்பு
தை திங்கள் முதல் நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை (Pongal 2024) இரு தினங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது, இதில் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.
கொண்டாட்டங்கள் என்றாலே இனிப்புகள் இல்லாமல் இருக்காது, அதிலும் பொங்கல் என்றால் சக்கரை பொங்கல், கரும்பு என இனிப்பு நிறைந்த உணவுகள் அதிகம் இருக்கும்.
என்ன தான் ஆரோக்கியத்தில் கருத்துடையவராக இருந்தாலும் பண்டிகை காலத்தில் இத்தகைய இனிப்புகளை தவிர்ப்பது கடினம்.
இனிப்புகளை சாப்பிட்டு விட்டால் கவலை வேண்டாம்
பண்டிகை முன்னிட்டு நீங்கள் அதிக இனிப்புகளை(Sweets) எடுத்து கொண்டதால் ஆரோக்கியம் குறித்த குற்ற உணர்வு விரைவிலேயே உங்களை பற்றிக் கொள்ளும்.
இத்தைய சூழ்நிலைகளில் இரத்த சர்க்கரை அளவை சீராக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் மீண்டும் ஆரோக்கியமான உணவு முறையை பின் தொடர்வது உடல் மற்றும் மனசோர்வில் இருந்து உங்களை காப்பாற்றும்.
நீரேற்றமுடன் இருப்பது
இனிப்பு அதிகம் சாப்பிட்டவர்கள் தங்கள் உடலை நீரேற்றமுடன் வைத்து இருப்பது நல்லது.
நீர், மோர், சர்க்கரை இல்லாத குளிர்பானங்கள், பழச்சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்வது. சூடான நீரை பருகுவது சிறப்பான நன்மை தரும்.
நடைபயிற்சி
விடுமுறை தினம் மற்றும் பண்டிகை காரணம் காட்டி நடைபயிற்சி செய்யாமல் இருப்பதை தவிர்த்து விட்டு, சிறிது தூரம் நடை பயிற்சி செய்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை (blood Sugar)கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
Geety
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுவதுமாக தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுகளான பயிர்கள் பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது, சமநிலையான ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |