காலையில் பொங்கல் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா? அதை உண்பதால் தூக்கம் வர காரணம் இதுதான்
காலையில் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக பொங்கல் இருக்கிறது. இதில் கலோரிகள் அதிகமாகவும், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது காலை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
காலையில் பொங்கல் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரத்தில் மந்தமான மற்றும் தூக்கம் வருவது போன்ற உணர்வு வரும்.
பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது?
எண்ணெய், டால்டா, நெய் போன்றவை அதிகமாக சேர்த்து சமைக்கப்பட்ட எந்த உணவு வகையாக இருந்தாலும் சாப்பிட்ட உடனே தூக்க உணர்வு ஏற்படுவது இயல்புதான். அது பொங்கலுக்கு மட்டுமே உண்டான குணம் இல்லை.
இந்த உணவு வகைகள் செரிப்பதற்கும் நிறைய நேரம் தேவைப்படும். முக்கியமாக இந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக அளவு ஆக்ஸிஜனும் வேண்டும். இதனால், மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைந்து வயிற்றுப் பகுதிக்குச் செல்லும். எனவே, மூளையைத் தூண்டுகிற சக்தி குறைந்து அதனுடைய செயல்பாடுகள் மந்தமாக நடைபெறத் தொடங்கும்.
இதுமாதிரியான நேரங்களில்தான் அதிக களைப்பாக இருப்பது போலவும், தூங்கினால் நன்றாக இருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. உண்ட மயக்கம் என்று சொல்வதும் இதைத்தான். பிரச்னை பொங்கலில் மட்டுமே இல்லை.
அது எப்படி தயார் செய்யப்படுகிறது மற்றும் நாம் எந்த அளவில் அதை சாப்பிடுறோம் என்பதிலும் இருக்கிறது என்பதே உண்மை!!