கோஹ்லியை பின்பற்றினால் பார்மிற்கு வரலாம்: பாகிஸ்தான் வீரருக்கு யோசனை கூறிய அவுஸ்திரேலிய ஜாம்பவான்
பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாமின் மோசமான பார்ம் குறித்து ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்துள்ளார்.
பாபர் அசாம்
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் சொதப்பிய நிலையில், கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை.
அத்துடன் அவரது மோசமான பார்மினால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். மேலும் முகமது ரிஸ்வான் அவுஸ்திரேலிய தொடருக்கு அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாபர் அசாம் குறித்து அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
பாண்டிங் கருத்து
அவர் கூறும்போது, விராட் கோஹ்லியின் புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்து பாபர் தனது டெஸ்ட் மற்றும் கேரியரை புதுப்பிக்கலாம் என்றார்.
மேலும் பேசிய அவர், "பாபரின் ஸ்கோர்களை பார்க்கும்போது, முன்பு விராட் கோஹ்லியுடன் பேசிக் கொண்டிருந்த விடயங்களைப் போலவே இருந்தது. சில நேரங்களில் மற்றும் விராட் இதைப் பதிவு செய்ததாக நான் நினைக்கிறேன்.
அவருக்கு இருந்த ஒரு சிறிய இடைவெளி, அவர் சிறிது நேரம் விளையாட்டில் இருந்து விலகி புத்துணர்ச்சியடையவும், அவர் தீர்த்து வைக்க வேண்டிய சில விடயங்களை வரிசைப்படுத்தவும் செய்தார். இதுவே பாபருக்கு தேவையானதாக இருக்கலாம்.
ஒருவேளை பாபர் சிறிது நேரம் விலகி செல்ல வேண்டும் மற்றும் மிகவும் கடினமாக முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். சிறிது நேரம் Kit bagஐ பூட்டிவிட்டு வேறு எதையாவது யோசித்துவிட்டு, தன்னை ரீசார்ஜ் செய்துவிட்டு வரலாம். மீண்டும் அவர் தனது கேரியரில் பார்முக்கு வருவார் என்று நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |