கோலியைப் போல் மீண்டு வந்த அவர் அரையிறுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்! ஜாம்பவான் வீரர் பாண்டிங்
உலகக்கோப்பையில் கோலியைப் போல மீண்டு வந்த ஷஹீன் ஷா அஃப்ரிடி அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என பாண்டிங் கூறியுள்ளார்
இந்த தொடரில் ஷஹீனிடம் இருந்து மேலும் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன் - ரிக்கி பாண்டிங்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை டி20 போட்டி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி காயத்தில் இருந்து மீண்டு வந்து பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.
முதல் இரண்டு ஆட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்ததை ஷஹீன், இந்த தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில் ஷஹீன் ஷா அஃப்ரிடி குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
AP
அவர் கூறுகையில், 'இன்னும் நூறு சதவீத காயத்தில் இருந்து மீளவில்லை என்று ஷஹீன் கூறலாம், ஆனால் நான் பார்த்ததில் அவர் பாகிஸ்தானை முன்னேற்றுவதற்கான திறவுகோலை வைத்திருக்கிறார். மேலும் அவர் அழகாக பயணிக்கிறார். களத்தில் இருக்கும்போது அவர் என்ன திறன் கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியும்.
அவர் 90 சதவீதத்தில் செயல்பட்டாலும், வரும் போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். ஷஹீன் தனது மனதில் சில கவலைகளைக் கொண்டிருந்திருக்கலாம் ஆனால் அவருக்கோ, பாகிஸ்தான் வரிசைமுறை மற்றும் பயிற்சி குழுவுக்கோ இனி இல்லை. மேலும் இரண்டு போட்டிகளில் ஷாஹீன் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன்.
விராட் கோலி இந்த தொடரில் திரும்பி வந்ததைப்போல் ஷஹீனும் பாஃர்முக்கு திரும்பியுள்ளார்.
சில நேரங்களில் நீங்கள் ஒரு வீரரை தேர்ந்தெடுத்து பின் விடுவிக்க வேண்டும். ஏனெனில் சாம்பியன் வீரர்கள் வேலையை செய்ய ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள்' என தெரிவித்துள்ளார்.