கமகமக்கும் கிராமத்து பூண்டு மிளகு குழம்பு.., எப்படி செய்வது?
பூண்டில் உள்ள அலிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் இந்த சுவையான பூண்டு மிளகு குழம்பை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், சத்தான பூண்டு மிளகு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- மல்லி விதை- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- மிளகு- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 5
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- பூண்டு- 2 கைப்பிடி
- தக்காளி- 2
- உப்பு- தேவையான அளவு
- புளி- எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- குழம்பு மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கடலை பருப்பு, மல்லி விதை, சீரகம், வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நல்லெண்ணய், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் புளியை கரைத்து சேர்த்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொத்திக்கும்போது அதில் அரைத்த மசாலா ஒரு ஸ்பூன் மற்றும் வெல்லம் சேர்த்து கெட்டியாகி வந்ததும் இறக்கினால் சுவையான பூண்டு மிளகு குழம்பு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |