பாவம் போரிஸ் ஜான்சன்... விடைபெறும்போது கூட பிரதமர் மீது மோசமான விமர்சனம்
பிரதமர் பதவியிலிருந்து விடைபெறும் போரிஸ் ஜான்சன் தனது இறுதி உரையை ஆற்றினார்.
சிலர் அவரையும் அவரது உரையையும் மோசமாக விமர்சித்துள்ளார்கள்.
போரிஸ் ஜான்சன் பிரித்தானிய பிரதமராக இருந்து விடைபெறுவது அனைவருக்குமே சோகத்தை ஏற்படுத்தும் விடயம் என்று கூறமுடியாதுதான்.
ஆனாலும், அதற்காக இப்படியெல்லாமா ஒரு பிரதமரை விமர்சிப்பது என்று கேட்கும் அளவுக்கு போரிஸ் ஜான்சனை சமூக ஊடகங்களில் மோசமாக விமர்சித்துள்ளார்கள் சிலர்.
பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறும் முன் இறுதியாக உரை ஆற்றினார் போரிஸ் ஜான்சன். ஆனால், அவரது உரை தொடங்கியதுமே, அடுத்த தெருவில் ஒரு கூட்டம் மக்கள், அவரைக் கேலி செய்வது போல, சென்று வாருங்கள் போரிஸ் (Bye Bye Boris) என பாடத் துவங்கியிருக்கிறார்கள்.
சமுக ஊடகங்களிலோ, ஒழிந்தார் போரிஸ் என்னும் அளவுக்கு மோசமாக விமர்சித்துள்ளார்கள் சிலர்.
போரிஸ் ஜான்சனின் பிரியா விடை உரை அருமையாக இருந்தது. பொய், பொய், பொய், அவர் சொன்னதெல்லாம் பொய்தான். தனது தோல்விகளுக்கு மன்னிப்புக் கேட்கவோ, அல்லது அவரது உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவமனைக்கு நன்றி சொல்லவோகூட இல்லை, பரிதாபமான மனிதன் என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.
மற்றொருவரோ, தனது பதவிலியிலிருந்து விடைபெறும்போதுகூட தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பொய்களால் நிறைந்த உரை. அரசியல், நேர்மை, ஒழுக்கம் மற்றும் இரக்கம் ஆகிய நற்குணங்களுக்குத் திரும்ப இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேல், ஒருவர் ஒழிந்தார் போரிஸ், நிம்மதி என்று கூறியிருப்பதுதான் மகா மோசம்!