சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்லின் மாபெரும் சாதனையை நொறுக்கிய பூரன்
டி20யில் அதிக சிக்ஸர்கள் விளாசிய மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்தார்.
நிக்கோலஸ் பூரன்
நடப்பு டி20 உலகக்கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 53 பந்துகளில் 98 ஓட்டங்கள் குவித்தார். இதில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் அவரது டி20 சிக்ஸர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்தது.
முன்னதாக கிறிஸ் கெய்ல் (Chris Gayle) 124 சிக்ஸர்கள் அடித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் எனும் சாதனையை செய்திருந்தார்.
அதனை பூரன் முறியடித்து தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 84 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் 2000 டி20 ஓட்டங்களை கடந்துள்ளார்.
அதிக டி20 சிக்ஸர்கள் விளாசிய மேற்கிந்திய தீவுகள் வீரர்கள்
- நிக்கோலஸ் பூரன் - 128 சிக்ஸர்கள்
- கிறிஸ் கெய்ல் - 124 சிக்ஸர்கள்
- எவின் லீவிஸ் - 111 சிக்ஸர்கள்
- கீரன் பொல்லார்டு - 99 சிக்ஸர்கள்
- ரோவ்மன் பாவெல் - 90 சிக்ஸர்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |