ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த நிகோலஸ் பூரான்
18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
SRH vs LSG
இதில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த 7 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்கள் எடுத்தது.
ஐதராபாத் தரப்பில், அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ஓட்டங்கள் குவித்திருந்தார். லக்னோ தரப்பில், ஷர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய லக்னோ அணி, 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன்
லக்னோ தரப்பில், நிக்கோலஸ் பூரன் மற்றும் மிச்சேல் மார்ஷ் இருவரும் அரைசதம் அடித்தனர். இதில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடர்களில் பூரான் 3 முறை 20 க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் நடித்திருந்தார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 4 முறை 20 க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த ஒரே நபர் என்ற சாதனையை பூரான் படைத்துள்ளார்.
ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 3 முறை 20 க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |