உலகக்கோப்பையில் படுமோசமான தோல்வி! வேதனை தெரிவித்த கேப்டன்
இரண்டு முறை டி20 சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது
ஸ்காட்லாந்து அணியுடன் தோல்வியடைந்தது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஹோபர்ட்டில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்திடம் படுதோல்வி அடைந்தது.
AFP / David Gray
பலம் வாய்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 118 ஓட்டங்களில் சுருண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தோல்வி குறித்து மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பூரன் கூறுகையில்,
'இது எங்களுக்கு ஒரு கடினமான தோல்வி. இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடினமாக உழைத்து அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவோம். அதற்கு நாங்கள் பொறுப்பு.
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்கள் துடுப்பாட்டம் ஏமாற்றம் அளித்தது. எனவே நாங்கள் இன்னும் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்த தோல்வியை கூடிய விரைவில் மறந்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவது முக்கியம்' என தெரிவித்துள்ளார்.