IPL 2024: ருத்ர தாண்டவமாடி அணியை தலைநிமிர செய்த பூரன்
ஐபிஎல் தொடரின் 28வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ்.
கே.எல்.ராகுல் 39
ஈடன் கார்டன் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. டி காக் 10 ஓட்டங்களில் அரோரா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய அணித்தலைவர் கே.எல்.ராகுல் 27 பந்துவீச்சில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
✌️wickets in ✌️ overs for @KKRiders!
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
A wicket each for @Russell12A & @chakaravarthy29 ? ?
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #KKRvLSG pic.twitter.com/HDTLXUDgOK
பூரன் சிக்ஸர் விளாசல்
பாதோணி 27 பந்துகளில் 29 ஓட்டங்களில் அவுட் ஆக, லக்னோ அணி 5 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்கள் என தடுமாறியது.
அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார். 32 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், அரோரா, நரைன், வருண் மற்றும் ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ICYMI!
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
?????? ????? ?
Nicholas Pooran did his thing at the Eden Gardens with an important 45(32) ??
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #KKRvLSG | @LucknowIPL pic.twitter.com/suUHpasSvV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |