அணியை காப்பாற்ற பந்துவீச்சை கையிலெடுத்த பூரன்! அதிர்ந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் போட்டி முல்தானில் நடந்து வருகிறது.
ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரன், கேப்டனாக பதவியேற்ற பிறகு பெரிதளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் இன்றைய போட்டியில் அவர் பந்துவீச முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
First international wicket for West Indies skipper Nicholas Pooran ☝️
— Pakistan Cricket (@TheRealPCB) June 12, 2022
End of a fine opening stand ⚡#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/ltXA9PZ9eP
இதற்கு முன்பு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீசியிருந்த அவர், இன்று இரண்டாவது முறையாக பந்துவீசியதில் விக்கெட்டுகளை அள்ளினார். தொடக்க வீரர் பஹார் ஸமானை 35 ஓட்டங்களில் வெளியேற்றிய அவர், அரைசதம் அடித்த மற்றோரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக்-ஐயும் அவுட் செய்தார்.
Imam-ul-Haq's scores this series:
— Pakistan Cricket (@TheRealPCB) June 12, 2022
65, 72, 62
He is dismissed after another stellar contribution ?#PAKvWI | #KhelAbhiBaqiHai pic.twitter.com/XxwLdDyzxs
பின்னர் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 11 ஓட்டங்களிலும், முகமது ஹரிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து பூரனின் மிரட்டல் பந்துவீச்சில் நடையை கட்டினர். முக்கிய வீரர்களை பூரன் ஆட்டமிழக்க செய்ததால் பாகிஸ்தான் அணி ரன் எடுக்க திணறி வருகிறது.
மொத்தம் 10 ஓவர்களை வீசிய பூரன், 48 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சாகும்.