"குடிகார அங்கிள் மாதிரி பேசுறாரு" : கமலிடம் வம்பிழுத்த பூர்ணிமா! பிக்பாஸின் அடுத்த நடவடிக்கை என்ன?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் தமிழ் 7' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பூர்ணிமா, கமலை தகாத வார்த்தையில் விமர்சித்துள்ளார்.
Bigg Boss Season 7
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகி வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருகிறது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அன்னபாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா மற்றும் DJ ப்ராவோ ஆகியோ wild card entry இல் சென்றுள்ளனர்.
இதையடுத்து பூகம்பம் டாஸ்க் வைத்து 3 போட்டியாளர்களை வெளியேற்றி, இதற்கு முதல் வெளியேறிய போட்டியாளர்களில் இருந்து போட்டியாளர்களை உள்ளே அனுப்பவுள்ளதாக பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு வீடியோவில் பூர்ணிமா கமலை தவறாக விமர்த்துள்ளார்.
"குடிகார அங்கிள் மாதிரி பேசுறாரு"
நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசியுள்ளனர்.
அதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து பூர்ணிமா பேசியுள்ளார். இந்த பேச்சு வார்த்தையின் போது கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறியுள்ளார்.
இது சம்பந்தமான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் முகமாக பிக்பாஸ் பூர்ணிமாவை வீட்டில் இருந்து வெளியேற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear Kamal sir, #Poornima feels not happy with you becoz you mocked her ?
— Troll Mafia (@offl_trollmafia) November 22, 2023
"Behaved Like drunken Uncle"
Poornima better you walk out ?#biggbosstamil #biggbosstamil7 #Vichitra #biggboss7tamil #Biggbosstamilseason7
pic.twitter.com/vuS7cQg7EN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |