பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு திருமணம்! எப்போது தெரியுமா?வெளியான அறிவிப்பு
பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மாவுக்கு திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். முதலில் மொடலிங் துறையில் கால் பதித்த இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
அதன் பின், சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் பிரபலமான இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், அதன் பின் பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க துவங்கினார்.
இதே சீரியலில் கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் மதனும் நடித்து வந்தார்.
இந்நிலையில், இந்த ஜோடி ஒருவரை ஒருவர் காதலை வெளிப்படுத்தியதால், காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் வரும் 15-ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.