நாவூறும் சுவையில் KFC சிக்கன் பாப்கார்ன்..., இனி வீட்டிலேயே செய்யலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு தான் இந்த KFC சிக்கன் பாப்கார்ன்.
இந்த KFC சிக்கன் பாப்கார்னை கடைகளில் வாங்கி உண்டால் குறைந்தது 500 ரூபாய் செலவழிக்கவேண்டும்.
அந்தவகையில் வீட்டிலேயே KFC சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எலும்பில்லாத சிக்கன்- ½ kg
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 2 பல்
- வெங்காயம்- 1
- தயிர்- 1 கப்
- முட்டை- 2
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மிளகு- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மைதா- 1 கப்
- கார்ன் ப்ளார்- ½ கப்
- மல்லி தூள்- ½ ஸ்பூன்
- சீரக தூள்- ½ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் எலும்பில்லாத சிக்கனை 2 முறை நன்கு கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தயிர், முட்டை, அரைத்த கலவை, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து அதில் சிக்கன் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
இதற்கடுத்து ஒரு தட்டில் மைதா, கார்ன் ப்ளார், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஊறிய சிக்கனை மாவில் ஒன்று ஒன்றாக போட்டு பிரட்டி மீண்டும் ஊறவைத்த கலவையில் பிரட்டி அடுத்து மாவில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான KFC சிக்கன் பாப்கார்ன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |