13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ
Pope leo xiv declares death penalty inadmissible: அமெரிக்காவில் முன்னாள் இராணுவ மேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என போப் லியோ அறிவித்துள்ளார்.
மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தை அனுசரித்த வேளையில், போப் லியோ மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவித்தார்.
முன்னாள் இராணுவ மேஜர்
அமெரிக்காவில் கடந்த 2009-ஆம் ஆண்டு 13 இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற, முன்னாள் இராணுவ மேஜர் நிஜாஸ் மாலிக் ஹசனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் கைதியாக இருந்து வரும் நிஜாஸ் மாலிக் ஹசனுக்கு, வரும் டிசம்பர் 3ஆம் திகதி மதியம் 1 மணிக்கு ஃபோர்ட் ஹூடில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
கடந்த 2ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் இராணுவ மேஜரான ஹசனின் மரண தண்டனை பொதுவெளியில் நிறைவேற்றப்பட்டு, நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்க போர் செயலர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
போப் லியோ
இந்த நிலையில், போப் லியோ XIV 'மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாதது' என கூறியுள்ளார். மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தை அனுசரித்த வேளையில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், மரண தண்டனை ஒரு மனிதனின் உள்ளார்ந்த கண்ணியத்தைத் தாக்குகிறது என, போப் பிரான்சிஸ் கொண்டுவந்த மரண தண்டனை குறித்த திருத்தப்பட்ட கத்தோலிக்க போதனையை மேற்கோள் காட்டினார்.
மேலும் அவரது பதிவில், "மரண தண்டனையை நாடாமலேயே பொதுநலனை பாதுகாக்க முடியும். நீதியின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். குற்றவாளிகளிடம் இருந்து மீட்புக்கான வாய்ப்பை முழுமையாகப் பறிக்காமல், அதே நேரத்தில் குடிமக்களைப் பாதுகாக்கும் திறமையான தடுப்புக்காவல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ், அனைத்து சூழ்நிலைகளிலும் மரண தண்டனையை அனுமதிக்க முடியாதது என்று அறிவிக்க அதிகாரப்பூர்வ கத்தோலிக்க போதனையை திருத்தினார்.
