கமலா ஹரிஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்தது: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
கமலா ஹரிஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்தது
சமீபத்தில் NBC News நிறுவனம் நடத்திய ஆய்வில், கமலா ஹரிஸுக்கு மக்கள் ஆதரவு கணிசமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
செப்டம்பரில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, கமலா, ட்ரம்பைவிட 5 புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு ஆதரவு குறைந்துள்ளதால், 5 புள்ளிகள் கீழிறங்கியுள்ளார்.
ஆக, கமலா, ட்ரம்ப் இருவருக்கும் இடையே tie என்னும் நிலை காணப்படுகிறது. அதாவது, இருவருக்கும் சம அளவில் 48 சதவிகித மக்கள் ஆதரவு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆக, தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கமலா மக்களிடையே தனக்கு ஆதரவை அதிகரிக்கச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |