நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரபலங்கள்: லிஸ்ட் இதோ
நடிகராக இருந்து அரசியல் தலைவர்களாக மாறிய பிரபலங்கள் குறித்த லிஸ்டை பார்ப்போம்.
எம்.ஜி.ஆர்
1972ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக எனும் பலம் பொருந்திய கட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் 3 முறை தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்துள்ளார்.
ஜெயலலிதா
எம்.ஜி.ஆர்-ன் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அதிமுகவை மீண்டும் மாபெரும் கட்சியாக மாற்றி முதலமைச்சராக 6 முறை தேர்வானார்.
சிவாஜி
சினிமாவில் எம்ஜிஆருக்கு பலத்த போட்டியாக இருந்த சிவாஜி 1988ம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை ஆரம்பித்தார். ஆனால் பெரிய அளவில் அது வரவில்லை.
பாக்கியராஜ்
1989ம் ஆண்டு பாக்கியராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.
டி. ராஜேந்தர்
1991ல் டி. ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் ஆரம்பித்தார். அதன் பின்னர் லட்சிய திமுக என பெயர் மாற்றம் செய்தார்.
விஜயகாந்த்
2005ம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து தனது பலத்தை அரசியலில் காட்டி எதிர்கட்சி தலைவராகவே மாறினார்.
சரத்குமார்
2007ம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
கருணாஸ்
2015ல் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை ஆரம்பித்தார்.
கார்த்தி
2018ல் கார்த்தி மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கினார்.
கமல்ஹாசன்
2018ம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.
விஜய்
2024ம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |