''நீயா'' படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் காலமானார்
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் தனது 80வது வயதில் காலமானார்.
பழம்பெரும் நடிகர்
தமிழில் ''நீயா'' படத்தில் இச்சாதாரி பாம்பாக நடித்தவர் சந்திரமோகன் (80). தெலுங்கு திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் நாளை நமதே, நீயா, டைம், சகுனி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஹீரோவாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் என 900க்கும் மேற்பட்ட படங்களில் சந்திரமோகன் நடித்திருந்தார்.
இந்த நிலையில், சமீப காலமாக பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததால் சந்திரமோகன் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறுதிச்சடங்குகள்
சந்திரமோகனின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் பமிடிமுக்காலா கிராமத்தில் பிறந்த சந்திரமோகன் தனது நடிப்பிற்காக சிறந்த குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என 2 நந்தி விருதுகளையும், சிறந்த பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |