யூடியூபில் வெளியானது ஐபிசி தமிழின்..போராட்டம் திரைப்படத்தின் 'வீர தமிழன்' பாடல்
ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள "போராட்டம்" திரைப்படத்தின் 'வீர தமிழன்' என்ற பாடல் யூடியூப்பில் வெளியாகி பார்வைகளை பெற்று வருகிறது.
ஐ.பி.சி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பாக "போராட்டம்" திரைப்படம் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் ஆரம்ப விழா கடந்த ஆண்டு யாழில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.
ராஜ் சிவராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் 'வீர தமிழன்' என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பார்வைகளை பெற்று வருகிறது.
பூவன் மதீசன் இசையில் சத்யன் மகாலிங்கம், வாஹீசன் ராசையா ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
மண்ணை அன்னையாக, எல்லோரும் அதன் பிள்ளையாக வெல்வோம் என்று, கால்பந்து விளையாட்டை குறிப்பிட்டு இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.சி குழுமத்தின் யூடியூப் சேனலில் இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |